பர்வேஷ்  முஷாரப்பிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

பர்வேஷ் முஷாரப்பிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

பர்வேஷ் முஷாரப்பிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 3:43 pm

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பிற்கு எதிரான தேசத் துரோக குற்றசாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமாபாத்  விசேட நீதிமன்றத்தில் பர்விஷ் முஷாரப்  ஆஜராகாததை அடுத்து இந்த வழக்கு விசாரணைகள் ஜனவரி 1 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

பர்வேஷ் முஷாரப் நீதிமன்றத்துக்கு வரும் வீதியில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை கவனத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய பர்விஸ் முஷாரப், பின்னர் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதன் பின்னர், வெளிநாடு ஒன்றில் வசித்துவந்த முஷாரப், நாடு திரும்பியதை அடுத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்