நல்லொழுக்கம் இல்லாத மாணவர்கள் சிறந்த பிரஜையாக மாறுவதில்லை – சுசில்

நல்லொழுக்கம் இல்லாத மாணவர்கள் சிறந்த பிரஜையாக மாறுவதில்லை – சுசில்

நல்லொழுக்கம் இல்லாத மாணவர்கள் சிறந்த பிரஜையாக மாறுவதில்லை – சுசில்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 9:18 am

பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்து சமூகத்துடன் இணையும் மாணவர்களிடம் நல்லொழுக்கம் காணப்படாவிடின், அவர்கள் சிறந்த பிரஜையாக மாறுவதில்லை என ஜனநாயகக் கட்சி தெரிவிக்கின்றது.

வத்தளையிலுள்ள பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வொன்றில், கட்சியின் கொலன்னாவை தொகுதி அமைப்பாளர் சுசில் கிந்தெல்பிட்டிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

சிறந்த பாடசாலை ஒன்றுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் முயற்சிப்பதாக குறிப்பிட்ட அவர், தமது பிள்ளையை எவ்வாறு சிறந்த பிரஜையாக மாற்றுவது, எதிர்காலத்தில் பிள்ளை எவ்வாறான ஒரு நிலையில் இருக்கும் என்பது குறித்து பெற்றோர் சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

[quote]பாடசாலைக்கு பிள்ளையை சேர்த்த நாள் முதல் 10, 12 வருடங்களாக பிள்ளைக்கு நேர்வழியைக் காட்டுகின்றனர். முதற்படியை ஆசிரியர்கள் காட்டுகின்றனர். எனவும் சுசில் கிந்தெல்பிட்டிய தெரிவித்துள்ளார் [/quote]

[quote] நாம் உள்ளே வரும் போது பேண்ட் வாத்தியங்களுடனும் சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். ஆரம்பம் முதலே அவர்களுக்கு ஒழுக்கம் தேவை, ஒழுக்கம் இல்லாவிட்டால் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து சமூகத்துடன் சேரும் போது அந்தப் பிள்ளை நாட்டிற்கு சிறந்த பிரஜையாக மாறுவதில்லை.” [/quote] என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்