குரங்குகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வு

குரங்குகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வு

குரங்குகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 12:13 pm

நாட்டிலுள்ள குரங்குகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குரங்குகளின் பெருக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையை தடுப்பதற்கு அந்தக் குரங்குகளை காட்டுக்குள் விடுவிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குரங்குகளின் இருப்பிடங்கள் மக்களினால் அழிக்கப்படுவதனால், அவை குடியிருப்புகளுக்கு அதிகளவில் வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதனால், பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்