உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தலைவர்களின் பெயர்கள் சமர்பிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தலைவர்களின் பெயர்கள் சமர்பிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தலைவர்களின் பெயர்கள் சமர்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 5:35 pm

வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்த 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தலைவர்களின் பெயர்கள் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.

வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்ட மேலும் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கும் புதிய தலைவர்கள் நியமதிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் இந்த நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதுவரையில் 9 உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், சில உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் முதற் தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழ் உள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் கடந்தவாரம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள கல்முனை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த போது, சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை தென் மற்றும் மேல் மாகாண சபைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் கலைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்