இவ்வருடத்தில் 190 யானைகள் இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிப்பு

இவ்வருடத்தில் 190 யானைகள் இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிப்பு

இவ்வருடத்தில் 190 யானைகள் இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 4:22 pm

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 190 யானைகள் இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதலுக்குள்ளான 60 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.டீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்தவருடம் 257 யானைகள் இறந்ததுடன், 70 பேர் உயிரிழந்ததாக எச்.டீ ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இந்த நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்