இந்திய மீனவர்கள் 32 பேருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

இந்திய மீனவர்கள் 32 பேருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 6:35 pm

இலங்கை கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 32 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 32 பேரும் திருகோணமலை நீதவான் யூ.எல்.எம். அஸ்ஹர் முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டனர்.

இந்த மீனவர்களை விசாரணைக்கு உட்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

காரைக்காலில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இந்த மீனவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது இந்திய மீனவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்