ஆட்சி செய்பவர்களில் ஒரு பகுதியினர் பொது மக்களை விழுங்கியுள்ளனர் – சஜித்

ஆட்சி செய்பவர்களில் ஒரு பகுதியினர் பொது மக்களை விழுங்கியுள்ளனர் – சஜித்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 9:26 pm

பெண்களுக்கான நிவாரண கடனுதவி வழங்கும் ஜனசுவய  நிகழ்ச்சி திட்டம் இன்று லுனுகம்வேர,கெந்தகஸ்மங்கட பிரதேசத்தில் நடைப்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரமதேசவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது.

இதன் போது பன்சல்கொடான மற்றும் கெந்தகஸ்மங்கட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 82 பெண்களுக்கு நிவாரண கடனுதவிகள் வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச :-

“கொழும்பில் உள்ள மிருக காட்சி சாலையில் அனகொண்டா பாம்பு ஒன்று மற்றுமொறு அனகொண்டா பாம்பை விழுங்கியுள்ளதாக கடந்த நாட்களில் செய்திகளில் கண்டேன். அந்த பாம்பு விழுங்கிய பாம்பை கக்கியுள்ளதாகவும் கேள்விப்பட்டேன்.இதே நிலைதான் இன்று நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.நாட்டை ஆட்சி செய்பவர்களில் ஒரு பகுதியினர் பொது மக்களை விழுங்கியுள்ளனர்.விழுங்கி கக்கியும் உள்ளனர். தமது சுயநலத்திற்காக திறைச்சேறி நிதியங்களை அனகொண்டாவைப் போல் இந்த அரசாங்கம் விழுங்குகின்றது.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected].lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்