அழகிய நீர்வீழ்ச்சி ”டெவோன்”

அழகிய நீர்வீழ்ச்சி ”டெவோன்”

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 11:24 am

இலங்கையின் எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டுகளிப்பதற்காக  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில்  வருகை தந்தவண்ணமுள்ளனர்.

நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்பதற்காக வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் மலையக பகுதியின் எழில் கொஞ்சும் அழகோ தனி அழகு.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள டெவோன் நீர் வீழ்ச்சியானது இலங்கையில் அமைந்துள்ள பிரபல்யமான மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

இந்த நீர்வீழ்ச்சி 281 அடி உயரத்தை கொண்டமைந்துள்ளது.

தற்போது நிலவும் வெயிலுடனான வானிலை காரணமாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவதுடன், இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கும் தவறுவதில்லை.

எனினும் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவிலான நீர் காணப்பட்ட போதிலும், மழையுடனான வானிலையினால் அப்பகுதிக்கு எவரும் விஜயம் செய்யவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் இந்த டெவோன் நீர்வீழ்ச்சியானது மாகவலி கங்கையின் கிளையாற்றில் அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்