யாழ். போதனா வைத்தியசாலையில் 11ஆவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் 11ஆவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் 11ஆவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 7:53 pm

யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பினால் தொடர்ந்தும் வைத்தியசாலையின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

எந்தவொரு இணக்கப்பாடுகளும் எட்டப்படாத நிலையில் 11ஆவது நாளாகவும் தொண்டர் ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர் சங்கத் தலைவர் எஸ். ஈழவளவன் நியுஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, அரச துறையில் சுகாதார ஊழியர்களாக நியமனம்  பெறுவதற்கு உரிய கல்வித் தகைமைகளை பெற்றிருக்க வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்