மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா செயலாளர் அழைப்பு

மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா செயலாளர் அழைப்பு

மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா செயலாளர் அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 6:11 pm

தென்சூடானில் இடம்பெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நெருக்கடிக்களை முடிவுக்கு கொண்டுவருவது அரசியல், இராணுவ மற்றும் அரச ஆதரவு ஆயுததாரிகளின் பொறுப்பு என பான் கீ முன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ள 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தென்சூடானில் தொடரும் மோதல்கள் உள்நாட்டு போராக மாற்றமடையும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா இதற்கு எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்