மாத்தளையிலும் மன்னாரிலும் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசேட பரிசோதனை

மாத்தளையிலும் மன்னாரிலும் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசேட பரிசோதனை

மாத்தளையிலும் மன்னாரிலும் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசேட பரிசோதனை

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 2:28 pm

மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்திலிருந்து  கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்த பற்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த எச்சங்கள் யாருடையது, அவர்களின் மரணம் எவ்வாறு நேர்ந்தது போன்ற சந்தேகங்களுக்கான பதிலை கண்டறியும் வகையில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக குருநாகல் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எச்சங்களின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை அறிக்கை மற்றும் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் அறிக்கை என்பன கிடைத்ததுடம் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

இந்த மனித எச்சங்கள் 1986 ஆம் ஆண்டுக்கும் 1990 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 26 ஆம் திகதி மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் உயிரி வாயுப் பிரிவொன்றை அமைப்பதற்கான அழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள்  உள்ளிட்ட 155 எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்த எச்சங்களில் தமது உறவினர்களுடைய எச்சங்களும் இருப்பதாக ஏற்கனவே 68 பேர் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசிகளை சமர்ப்பித்துள்ளனர்

இதேவேளை, மன்னார் ஏ 32 வீதியிலுள்ள கோயிலொன்றுக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது ஆறு மண்டை ஓடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இந்த மண்டை ஓடுகளும் எச்சங்களும் சுமார் 15 வருடங்கள் பழமையானவை என சட்ட வைத்திய அதிகாரி உறுதிபடுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்களின் மரணங்கள் எவ்வாறு நேர்ந்தது என்பது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்