பாவனைக்கு உதவாத உணவு பொருள்; முறைப்பாடுகளுக்கு 3 தொலைபேசி இலக்கங்கள்

பாவனைக்கு உதவாத உணவு பொருள்; முறைப்பாடுகளுக்கு 3 தொலைபேசி இலக்கங்கள்

பாவனைக்கு உதவாத உணவு பொருள்; முறைப்பாடுகளுக்கு 3 தொலைபேசி இலக்கங்கள்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 2:10 pm

பாவனைக்கு உதவாத உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்ற வர்த்தக நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சுகாதார அமைச்சு மூன்று தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய 0113 071 073 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சுகாதார அமைச்சிடமும், 0112 676 161  என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு மாநகர சபையின் மத்திய உணவு கட்டுப்பாட்டுப் பிரிவிடமும், முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர 19 77 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அதிகார சபையிடமும் முறைப்பாடு செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

பாவனைக்கு உதவாத உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்ற வர்த்தக நிலையங்களை நாளை முதல் நான்கு நாட்களுக்கு சுற்றிவளைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய பேக்கரிகள், உணவகங்கள், ஹோட்டல்கள், உணவு வகைகள், இறைச்சி, மீன், மரக்கறி, பழ வகைகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்ற வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு உத்தேசித்துள்ளது

பண்டிகை காலத்தில் ஒருசில வரத்த்தகர்கள் உணவு பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தாது செயற்படுவதாக சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சனநெறிசல் மிக்க நகரங்களில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறு மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றுநிருபம் மூலம் சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, இந்த மாதத்தில் மாத்திரம் பாவனைக்கு உதவாத உணவு வகைகள் தொடர்பில் 300 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை பொது சுகாதர பரிசோதர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்