ஜனாதிபதி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

ஜனாதிபதி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

ஜனாதிபதி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 8:33 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அனைத்து விடயங்களுக்கும் செல்ல வேண்டிய நிலையிலுள்ளதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[quote] ஜனாதிபதி வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு விட்டு நாட்டிற்கு வருகை தந்தவுடன் மரணச்சடங்கிற்கு திருமணத்திற்கு அல்லது சிறுவர்களின் பிறந்தநாளுக்கு செல்கின்றார். நாட்டில் அமைச்சர்கள் பலர் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு இந்த நிகழ்வுகளுக்கு செல்வதற்கான பொறுப்பினை அவர்களுக்கு வழங்குங்கள் [/quote] எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நிகழ்வுகளுக்கும் செல்வதால், இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதியின் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். அலரிமாளிகையில் இருந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

[quote]அமைச்சர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு உதவி புரிகின்றனர். [/quote] எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்