சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம்

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம்

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 5:14 pm

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி ஒன்றின் மீது இன்று அதிகாலை பூகொட பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த லொறியை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்டபோதும், அதனை பொருட்படுத்தாமல் குறித்த லொறி பயணித்துள்ளது.

அதனையடுத்து லொறியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த லொறியில் சட்டவிரோதமாக மாடுகள் எடுத்துச்  செல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை லொறியில் பயணித்திருந்த மேலும் 4 சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்