கோயில் அருகில் அகழ்வு பணி; 10 மண்டையோடுகள் மீட்பு

கோயில் அருகில் அகழ்வு பணி; 10 மண்டையோடுகள் மீட்பு

கோயில் அருகில் அகழ்வு பணி; 10 மண்டையோடுகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 5:28 pm

மன்னார் A32 வீதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மேலும் 4 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் மொத்தமாக 10 மண்டையோடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த மண்டையோடுகள் மற்றும் மனித எச்சங்கள் 15 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களின் மரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்