ஓய்வு பெற்றார் கிராம் ஸ்வான்

ஓய்வு பெற்றார் கிராம் ஸ்வான்

ஓய்வு பெற்றார் கிராம் ஸ்வான்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 12:37 pm

இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் கிராம் ஸ்வான் கிரிக்கெட் உலகிலிருந்து விடை பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்வான் பங்குபற்ற மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதான கிராம் ஸ்வான் , 2000 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகிற்கு கால்பதித்ததுடன் , 2008 ஆம் ஆண்டிலேயே முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.

இதுவரையிலும் 60 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கிராம் ஸ்வான் , 79 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 255 விக்கட்டுக்களை கைப்பற்றிய அதேவேளை , ஒருநாள் போட்டிகளில் 104 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

அவஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறும் ஆஷஸ்  கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப் பெற்றதன் பின்னரே கிரிக்கெட் உலகிலிருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்த போதிலும் , அதற்கான சந்தர்ப்பம் இல்லாததால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கிராம் ஸ்வான் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான உடற்தகுதியுடன் தான் இல்லையென தெரிவித்துள்ள ஸ்வான், ஆஷஸ் தொடரில் வெற்றிப் பெற வேண்டும் என்ற இலக்கில் போட்டிகளில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்