ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?

ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?

ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 6:55 pm

ஈரானின் கடற்படையைச் சேர்ந்த நால்வர் மீது, கொழும்பு துறைமுகத்தை அண்மித்த மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்த ஈரான் கடற்படை வீரர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கல்வீச்சு நடத்திய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல் வீச்சு தாக்குதல் நடத்தியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சந்தேகித்த பொலிஸார், அவரை மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியரிடம் ஒப்படைத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்