வரவு-செலவுத்திட்டம் 2014; மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு-செலவுத்திட்டம் 2014; மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு-செலவுத்திட்டம் 2014; மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 2:27 pm

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இன்று முற்பகல் ஆரம்பமான குழுநிலை விவாதம் நிறைவுபெற்றதும் வரவு_செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு மாலை ஆறு மணிக்கு சபையில் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தேசிய பொருளாதாரமொன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, 2016 ஆம் ஆண்டளவில் அரச கடன் வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்க கடனை 65 வீதம் வரை குறைக்கும் இலக்குடனேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது ஊழியர் செமலாப நிதியம் தொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தாலும் இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவருவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்காக மாத்திரம் சுகாதார துறைக்கு 155 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்

இதன்போது உரையாற்றிய ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க, பொருளாதார நெருக்கடிக்கு சிறுகுழுவினரே பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்

ஒருசிலர் மாத்திரம் பொருளாதாரத்தை நிருவகிப்பதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் இந்த நிலைமை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம்மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்