லண்டனில் திரையரங்கொன்றின் கூரை சரிந்ததில் 76 பேர் காயம்

லண்டனில் திரையரங்கொன்றின் கூரை சரிந்ததில் 76 பேர் காயம்

லண்டனில் திரையரங்கொன்றின் கூரை சரிந்ததில் 76 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 2:01 pm

லண்டனில்  திரையரங்கொன்றின் கூரை சரிந்து வீழ்ந்ததில் 76 பேர் காயமடைந்துள்ளனர்.

லண்டனிலுள்ள அலேப்போ திரையரங்கில் திரைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த  சந்தர்ப்பத்திலேயே கூரை சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது திரையரங்கில் சுமார் 720 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில்  7 பேரின் நிலை கவலைக்கிடமாக  உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1901 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த திரையரங்கின் கூரை சரிந்து வீழ்ந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்