யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் ஒன்பதாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் ஒன்பதாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் ஒன்பதாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 10:32 am

நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், தங்களின் பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்தக்கூடாது மற்றும் நிரந்தர நியமனத்திற்கான எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் தொண்டர் ஊழியர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.

யாழ். தொண்டர் ஊழியர்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சேவைகள் கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்த நிலைமையின் கீழ், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

இதன்போது தொண்டர் ஊழியர்கள் 80 பேருக்கு கல்வித் தகைமை அடிப்படையிலும், எனைய 126 பேருக்கு நிபந்தனை அடிப்படையிலும் நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கான சிபாரிசினை ஆளுநர் முன்வைத்துள்ளார்.

ஆயினும் இந்த சிபாரிசை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

தொண்டர் ஊழியர்கள் அனைவரும் சேவையில் நிரந்தரமாக உள்ளீர்க்கப்படும் வரை தங்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என அந்த சங்கத்தின் தலைவர் எஸ். ஈழவளவன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்