யாழ். தொண்டர் குடும்பநல தாதியர்கள் வீதிமறியல் போராட்டம்

யாழ். தொண்டர் குடும்பநல தாதியர்கள் வீதிமறியல் போராட்டம்

யாழ். தொண்டர் குடும்பநல தாதியர்கள் வீதிமறியல் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 4:27 pm

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குபட்ட தொண்டர் குடும்பநல தாதியர்கள் இன்று காலை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த வீதிமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தொண்டர்களாக சேவையாற்றும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொண்டர் குடும்பநல தாதியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் இறுதிவரை தொடரும் எனவும் குடும்பநல தாதியர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

கல்வித் தகைமைகளை கவனத்திற்கொள்ளாது, தமது நீண்டகால சேவையை அடிப்படையாகக் கொண்டு நிரந்தர நிமயனம் வழங்குவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என தொண்டர் சுகாதார ஊழியர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குடும்பநல தாதியர்களின் பிரச்சினை குறித்து வட மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் பத்மநாதன் சத்தியலிங்கத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

மாகாணத்திற்குள் உடனடியாக நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான வெற்றிடங்கள் தற்போது காணப்படவில்லை என சுட்டிக்காட்டியதுடன், எதிர்கால நியமனங்களின்போது இந்த தொண்டர் ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்