மோட்டார் வாகனப் பதிவுகள் வீழ்ச்சி

மோட்டார் வாகனப் பதிவுகள் வீழ்ச்சி

மோட்டார் வாகனப் பதிவுகள் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 10:08 am

மோட்டார் வாகனங்களின் பதிவு இந்த வருடத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வருடத்திற்குள் சுமார் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எம்.எஸ். ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டில் சுமார் 4 இலட்சம் மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

2011 ஆம் ஆண்டில் சுமார் ஐந்து இலட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்ததாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

வாகனங்களின் விலை அதிகரித்தமையே இந்த வருடத்தில் வாகனப் பதிவுகள் வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்