மாணவர்களின் உரிமைகளுக்காக சட்ட உதவியை நாடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்

மாணவர்களின் உரிமைகளுக்காக சட்ட உதவியை நாடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்

மாணவர்களின் உரிமைகளுக்காக சட்ட உதவியை நாடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 9:46 am

மாணவர்களின் உரிமைகளுக்காக சட்ட உதவியை நாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தரத்தில் கல்விபயிலும் மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளதுடன், இலவசக் கல்வியும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

போட்டிதன்மையான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை 2016ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆயினும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாவணர்கள் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருப்பதாக ஜோசப் ஸ்டாலின் ​தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்