தென்சூடானில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் விளிம்பில் உள்ளது – பரக் ஒபாமா

தென்சூடானில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் விளிம்பில் உள்ளது – பரக் ஒபாமா

தென்சூடானில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் விளிம்பில் உள்ளது – பரக் ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 7:45 pm

தென்சூடான் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் விளிம்பில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

தலைநகர் ஜூபாவில் ஏற்பட்ட மோதல்கள்கள் நாடாவிய ரீதியில் விஸ்தரித்து வரும் நிலையில், பரக் ஒபாமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பிரஜைகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பிற்கென 45 இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் தென்சூடானிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தை இலக்கு வைத்து ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய அமைதிகாக்கும் படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

முன்னாள் உப ஜனாதிபதி ரீக மசரின் சதி நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டதாக ஜனாதிபதி சல்வா கீர் தெரிவித்ததை அடுத்து கடந்த வார இறுதி முதல் இதுவரை குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூடானில் 22 வருடங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில் சுமார் ஒரு மில்லியன் பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தென்சூடான் சுதந்திரம் பெற்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்