கல்வி அமைச்சு கட்டடத்தில் தீ

கல்வி அமைச்சு கட்டடத்தில் தீ

கல்வி அமைச்சு கட்டடத்தில் தீ

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 11:17 am

பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டடத்தில் இன்று காலை தீ பரவியுள்ளது.

கல்வி அமைச்சு கட்டடத்தின் நான்காம் மாடியிலுள்ள ஓய்வூதிய பிரிவிலேயே தீ பரவியதாக அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.

குளிரூட்டி இயந்திரமொன்றில் ஏற்பட்ட மின்கசிவே தீ பரவியமைக்கு காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் தியணைப்பு சேவைப் பகுதியினர் தியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்