தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா மீளப் பெறவேண்டும் – குர்ஷித்

தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா மீளப் பெறவேண்டும் – குர்ஷித்

தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா மீளப் பெறவேண்டும் – குர்ஷித்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 11:40 am

இந்திய இராஜதந்திரி தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை அமெரிக்கா மீளப் பெற வேண்டும் என மத்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.

தேவயானி கைது நடவடிக்கை குறித்த முழு விபரங்களையும் வழங்குமாறும்  அமெரிக்காவிடம் கோரியுள்ளதாக குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இந்த கைது விவகாரத்தால் இரு தரப்பு உறவில்  பாதிப்பு ஏற்படாது என   அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ள  நிலையில் குர்ஷித் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வழங்கப்பட்ட  விசேட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் கைது நடவடிக்கை அமெரிக்க சட்டவிதிப்படி நடைபெற்றதாக  அமெரிக்க அரசாங்க சட்டத்தரணி ஒருவர்  விடுத்துள்ள அறிக்கைக்கு பாரதீய ஜனதாக்கட்சி ,  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்