சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்கால ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்கால ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்கால ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2013 | 1:46 pm

சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் வகையில் சமன்தேவ விக்கிரகமும், பூஜைபொருட்களும் ஊர்வலமாக இன்று எடுத்துச் செல்லப்படுகின்றன.

இன்று அதிகாலை சுபவேளையில் பெல்மதுலை கல்பொத்தாவல ரஜமகா விகாரையில் ஆரம்பமான ஊர்வலம் நாளை அதிகாலை சிவனொளிபாதமலையை சென்றடையவுள்ளது

மலை அடிவாரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படவுள்ள பூஜை பொருட்கள் மலை உச்சியில் உள்ள விசேட பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் இம்முறை யாத்திரை பருவக்காலம் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய அடுத்த வருடம் வெசாக் பூரணை வரை பக்தர்கள் சிவனொளிபாதலைக்கு சென்று வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வருடாந்தம் இன மத வேறுபாடின்றி பெருந்திரளான பக்தர்கள் சிவனொளிபாதமலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்