பஸ் தொழில்துறை சார் விடயங்களுக்கு கப்பமாக வழங்கப்படுகின்றது – கெமுனு விஜேரத்ன

பஸ் தொழில்துறை சார் விடயங்களுக்கு கப்பமாக வழங்கப்படுகின்றது – கெமுனு விஜேரத்ன

பஸ் தொழில்துறை சார் விடயங்களுக்கு கப்பமாக வழங்கப்படுகின்றது – கெமுனு விஜேரத்ன

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2013 | 9:26 am

பஸ் தொழில்துறை சார் விடயங்களுக்கு ஆண்டொன்றிற்கு சுமார் 2 பில்லியன் ரூபா கப்பமாக வழங்கப்படுகின்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெளிவுபடுத்தினார்.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்த கருத்து :-

“கப்பம் பெறுகின்ற மாபியா நடைமுறையொன்று தற்போது அதிகரித்து வருகின்றது. மாதமொன்றுக்கு 15 கோடி மாபியா இடம்பெறுகின்றது. ஆண்டொன்றுக்கு 180 கோடி மாபியா இடம்பெற்று வருகின்றது. எமது பஸ் தொழில்துறையாளர்களின் வருமானத்தை நிறுத்தி கொள்வதற்கு, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக காணப்படுகின்றது. பல வருடங்களாக இந்த சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. பஸ்களின் உரிமையாளர்களும் கப்பத்தை பெறுகின்றன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உதவியுடன் பஸ் உரிமையாளர்களும் கப்பம் பெறுகின்றன.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்