ஹங்குராங்கெத்த பிரதேச சபை மற்றும் வத்தேகம நகர சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

ஹங்குராங்கெத்த பிரதேச சபை மற்றும் வத்தேகம நகர சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 4:07 pm

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஹங்குராங்கெத்த பிரதேச சபை மற்றும் வத்தேகம நகர சபை என்பவற்றின் வரவு-செலவுத்திட்டங்கள் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளன.

ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 13வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு-செலவுத்திற்கு ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக பிரதேச சபையின் தவிசாளர் ரணசிங்க திசாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்ட கண்டி, வத்தேகம நகர சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் கிடைத்ததாக நகர சபையின் தலைவர் கே.சீ. லியனகே தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்