மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விமுறை தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை

மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விமுறை தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை

மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விமுறை தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 1:43 pm

மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விமுறை தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தெளிவுபடுத்துவதற்கான திட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கும் வகையில், இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி விசாகா நாணயக்கார தெரிவித்தார்.

பெரும் எண்ணிக்கையான மாணவர்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்க நேரிடும்போது, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விமுறையை பின்பற்றுவதில் சிக்கல் காணப்படுவதாக அவர் கூறினார்.

பௌதீக வளங்களுக்கு காணப்படும் பற்றாக்குறையும் இவ்வாறான சிக்கல்நிலையை தோற்றுவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இவற்றினை கருத்திற்கொண்டே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக விசாகா நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்