பாடசாலைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் கிடைப்பதில்லை – புத்திக்க பத்திரண

பாடசாலைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் கிடைப்பதில்லை – புத்திக்க பத்திரண

பாடசாலைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் கிடைப்பதில்லை – புத்திக்க பத்திரண

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 9:39 pm

நாட்டின் சில  பாடசாலைகளுக்கு சீருடைகளும் பாடப் புத்தகங்களும் கிடைப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண பாராளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னதாக அடுத்த ஆண்டுக்கான சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட வேண்டியிருந்தாலும் ஒரு சில பாடசாலைகளில் அந்த நடவடிக்கையை பூரணப்படுத்த முடியாமற்போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நிறைவுபெறுவதற்கு முன்னதாக நாட்டிலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிமணைகளுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பு கல்வி சேவைகள் அமைச்சுக்கே உள்ளதென அமைச்சர் கூறியுள்ளார்.

சீருடை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி  சேவைகள் அமைச்சு தமக்கு அறிவித்துள்ளதாகவும் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.

இதில் ஏதேனும் குறைபாடுகள் இடம்பெற்றிருக்குமாயின் அது குறித்து ஆராய்வதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்