பாகிஸ்தான் கடற்படைத் தளபதி உள்ளிட்ட குழு இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி உள்ளிட்ட குழு இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி உள்ளிட்ட குழு இலங்கைக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 1:34 pm

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொஹமட் அசீஸ் சண்டிலா உள்ளிட்ட மூவரடங்கிய பிரதிநிதிகள் குழு, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று நாட்டை வந்தடையவுள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேயின் அழைப்பின் பேரில், இந்தக் குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இந்த விஜயத்தின்போது, பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் இராணுவ மற்றும் விமானப் படைகளின் தளபதிகளையும், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியையும் சந்திக்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்