பருத்தித்துறையிலிருந்து கடலுக்குச் சென்றவரை காணவில்லை

பருத்தித்துறையிலிருந்து கடலுக்குச் சென்றவரை காணவில்லை

பருத்தித்துறையிலிருந்து கடலுக்குச் சென்றவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 9:38 am

பருத்தித்துறை, சின்னத்தோட்டம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

அவர் நேற்று மாலை 6.30 அளவில் கடற்றொழிலுக்காகச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்