திருமணபந்தத்தில் இணைந்தார் ஸ்ரீசாந்த்

திருமணபந்தத்தில் இணைந்தார் ஸ்ரீசாந்த்

திருமணபந்தத்தில் இணைந்தார் ஸ்ரீசாந்த்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 4:31 pm

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும்  கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரருமான ஸ்ரீசாந்த் இன்று திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

ஸ்ரீசாந்திற்கும் ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை சேர்ந்த நயன் என்ற புவனேஸ்வரி குமாரி என்பவரும் இன்று கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமகள் நயன் என்ற புவனேஸ்வரி குமாரி ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று மாலை கொச்சியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் ராஜஸ்தான் ராஜ குடும்ப பாரம்பரிய முறைப்படி திருமண விழா நடத்தப்படுகிறது. இதிலும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

இதேவேளை, ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்