டயகமவில் வீடொன்றில் பரவிய தீ தொடர்பில் விசாரணை

டயகமவில் வீடொன்றில் பரவிய தீ தொடர்பில் விசாரணை

டயகமவில் வீடொன்றில் பரவிய தீ தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 9:26 am

டயகம தோட்டத்தின் ஐந்தாம் பிரிவிலுள்ள வீடொன்றில் பரவிய தீ தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்னொழுக்கு காரணமாக தீ பரவியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

தீயினை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து நேற்று மதியம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிலிருந்த உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்