கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவருக்கு எதிரான மனு தள்ளுபடி

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவருக்கு எதிரான மனு தள்ளுபடி

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவருக்கு எதிரான மனு தள்ளுபடி

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 10:31 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிடல் மஹாராஜா நிறுவன தலைவருக்கு எதிராக ஐக்கிய
தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மாத்தறை மேலதிக நீதவான் மஞ்சுல கருணாரத்ன முன்னிலையில் நேற்று பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைவர் நேற்றைய தினம்
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மாத்தறை மேலதிக நீதவான் மஞ்சுல கருணாரத்ன கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 81 ஆவது விதிமுறையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைபாட்டை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவன தலைவர் சார்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 5 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த நகர்த்தல் மனுவை ஆராய்ந்த மாத்தறை மேலதிக நீதவான் மஞ்சுல கருணாரத்ன, வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை எனவும், அவர் சார்பாக சட்டத்தரணிகள் மாத்திரம் ஆஜராகின்றமை போதுமானது என்றும் அறிவித்தார்.

இதன் பிரகாரம் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில்,  வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்ஸி அரசகுலரத்ன, இந்த நிறுவனம் சட்டத்தின் முன் தனிநபராக கருதப்படும் ஒரு நிறுவனமாகும் என சுட்டிக் காட்டினார்.

சட்டத்தரணி ராமசந்திர குணசேகரவின் வழிகாட்டலின் கீழ், ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்ஸி அரசகுலரத்னவுடன், ஜீ.ஜீ. அருள்பிரகாசம், யூ.ஆர். டி சில்வா, நலித இந்தரதிஸ்ஸ, வசந்த பட்டகொட, சுசார தினால் டி சில்வா, விஷ்வா டி லிவேரா தென்னக்கோர், நிரஞ்சன் அருள்பிரகாசம் மற்றும் நதீ சரத்சந்திர ஆகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

முறைபாட்டாளர் சார்பாக சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணாயக்கார பிரசன்னமாகியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்