கென்ய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

கென்ய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

கென்ய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 1:48 pm

கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்நாட்டின் 50ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

நைரோபிக்கு அருகிலுள்ள கசராய் நகரத்திலுள்ள மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 12.45 அளவில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமானதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

1969ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்து கென்யா சுதந்திரம் அடைந்தது.

இதேவேளை, கென்ய ஜனாதிபதி உகுறு கென்யாட்டாவுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் நைரோபியிலுள்ள ஐக்கிய நாடுகளின் ஆபிரிக்க தலைமையகத்தையும் ஜனாதிபதி பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்