கிளர்ச்சியாளர்களுக்கான உதவிகளை இடை நிறுத்தியது அமெரிக்கா

கிளர்ச்சியாளர்களுக்கான உதவிகளை இடை நிறுத்தியது அமெரிக்கா

கிளர்ச்சியாளர்களுக்கான உதவிகளை இடை நிறுத்தியது அமெரிக்கா

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 10:21 am

சிரியாவின் வட பிராந்தியத்தில் உள்ள  கிளர்ச்சியாளர்களுக்கான உதவிகளை  இடை நிறுத்துவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.

வாகனங்கள், தொலைத் தொடர்பாடல் கருவிகள் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் மனிதாபிமான ரீதியிலான உதவிகளும் ஒத்துழைப்புக்களும் தொடரும் என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் உள்ள மேற்குலகத்திற்கு ஆதரவான கிளர்ச்சிக் குழுவுடன், குறித்த கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷ்ஷார்ட் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கிளர்ச்சியாளர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்திவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்