வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆளுங்கட்சி – எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆசேபனை

வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆளுங்கட்சி – எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆசேபனை

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 10:17 pm

கிண்ணியா பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆளுங்கட்சி – எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று ஆசேபனை தெரிவித்துள்ளனர்.

இந்த வரவு – செலவுத்திட்டம் கிண்ணியா பிரதேச சபைத் தலைவரால் முதலாம் வாசிப்புக்காக இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஆளுங்கட்சியின் 4 உறுப்பினர்களும், எதிர்கட்சியின் ஒருவரும் வரவு -செலவுத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கையை விடுத்ததாக உபதவிசாளர் மொஹமட் நிஹார் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்