காலாவதியான பொருட்கள் ஜாஎல பகுதியில் கண்டுபிடிப்பு

காலாவதியான பொருட்கள் ஜாஎல பகுதியில் கண்டுபிடிப்பு

காலாவதியான பொருட்கள் ஜாஎல பகுதியில் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 7:26 pm

ஜாஎல பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்த 3 கொள்கலன்களில் இருந்து  காலாவதியான பெருமளவு உணவுப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது.

காலாவதியான பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, இறைச்சி மற்றும் மரக்கறி போன்ற உணவுப் பொருட்கள் கொள்கலன்களில் இருந்ததாக அதிகார சபையின் தலைவர் றூமி மர்ஷுக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கொம்பனித்தெருவில் நுகர்வோர் விவகார அதிகாரிகளால் நேற்று சுற்றிவளைக்கப்பட்ட களஞ்சியசாலை இன்று மீண்டும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளால் நேற்று சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலை இன்று மீண்டும் இயங்குவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்