ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட உக்ரேயின் விருப்பம்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட உக்ரேயின் விருப்பம்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட உக்ரேயின் விருப்பம்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 8:10 pm

சர்ச்சையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு உக்ரேயின் விருப்பம் தெரிவித்துள்ளது.

உக்ரேனில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் எதிர்தர்ப்பாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் பிரஸல்சில் வைத்து  ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்திற்கான  தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு  உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்திற்கான  தலைவர் கத்தரின் அஷ்டன்  தெரிவித்துள்ளார்.

எனினும் உடன்படிக்கை எப்போது கைச்சாதத்திடப்படும் என குறிப்பிடவில்லை  என்பதுடன் ,இது தொடர்பிலான மேலதிக தகவல்களை அஷ்டன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்