இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் –  ஜீ.கே.வாசன்

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் – ஜீ.கே.வாசன்

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் – ஜீ.கே.வாசன்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 12:04 pm

இந்திய, இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ரோந்துக் கப்பலை ஒப்படைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜீ.சே.வாசன் இந்த கருத்தினை கூறியுள்ளதாக “திஹிந்து’ தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, மியன்மார் உட்பட பல்வேறு நாடுகளின் மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளைத் தாண்டி இந்திய கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் மாத்திரம் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடியில் வெளிநாட்டு மீனவர்கள் 359 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 61 மீன்பிடி படகுகளும் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வாசன் தெரிவித்துள்ளார்.

இதில் 275 இலங்கை மீனவர்களும் அடங்குவதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்