விலாடிமீர் லெனினின் சிலைக்கு சேதம்

விலாடிமீர் லெனினின் சிலைக்கு சேதம்

விலாடிமீர் லெனினின் சிலைக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 3:49 pm

உக்ரைன் தலைநகரில் அமைந்துள்ள ரஷ்ய சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகர் விலாடிமீர் லெனினின் சிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டு ஜனாதிபதியின் ரஷ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்திற்கு எதிரப்பும் தெரிவிக்கும வகையில் இந்த சிலை உடைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கிவ்வில் நேற்று ஒன்று கூடியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான உடன்படிக்கை ஒன்றுக்கு உக்ரைன் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ள நிலையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

உக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்றாவது வாரமாகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்