போர் சேவல்களை வைத்து சூதாட்டம்; 11 பேர் கைது

போர் சேவல்களை வைத்து சூதாட்டம்; 11 பேர் கைது

போர் சேவல்களை வைத்து சூதாட்டம்; 11 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 5:47 pm

புத்தளம், லுணுவில, பண்டிருப்பு பகுதியில் போர் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனுவில பண்டிருப்பு பகுதியில் சந்தேகநபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 09 போர் சேவல்கள், 09 மோட்டார் சைக்கிள்கள், வேனொன்று மற்றும் மூன்று முச்சக்கர வண்டிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் வென்னப்புவ, நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்