பனிச்சங்குளத்தில் பஸ் விபத்து; 24 பேர் காயம்

பனிச்சங்குளத்தில் பஸ் விபத்து; 24 பேர் காயம்

பனிச்சங்குளத்தில் பஸ் விபத்து; 24 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 7:14 pm

முல்லைத்தீவு, மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

A9 வீதியில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்சொன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாது விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்