பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், வாக்களிக்க வேண்டாம் – மஹிந்த யாப்பா அபேவர்தன

பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், வாக்களிக்க வேண்டாம் – மஹிந்த யாப்பா அபேவர்தன

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 1:46 pm

தேர்தல்களின்போது அளவிற்கு அதிகமாக பணத்தை விரையம் செய்யும் தரப்பினருக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

திக்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அளவிற்கு அதிகமாக பணத்தை செலவிடுவோருக்கும், அதிகளவில் பணத்தை சம்பாதித்து விரையம் செய்வோருக்கும் வாக்களிக்க வேண்டாமெனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

அந்த பணம் ஒரு வகையில் நாட்டு மக்களிடம் சூறையாடப்பட்ட பணம் எனவும், அந்த பணம் பகிர்ந்தளிக்கப்படும் போது, அதனை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

[quote]சிலர் சாராயம் வழங்குகின்றனர். சிலர் சோறு வழங்குகின்றனர். மற்றும் சிலர் பணத்தை வழங்குகின்றனர். மற்றுமொரு தரப்பினர் மடிக் கணனிகளை வழங்குகின்றனர். தொலைபேசிகளை வழங்குகின்றனர். ஆடைகள் புத்தகங்களை வழங்குகின்றனர்.[/quote] அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்