தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் தம்மை பதிவு செய்வது கட்டாயம்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் தம்மை பதிவு செய்வது கட்டாயம்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் தம்மை பதிவு செய்வது கட்டாயம்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 2:19 pm

அடுத்த வருடம் முதல் தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் தம்மை பதிவு செய்துக்கொள்ளவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வெளிநாடுகளில் தொழிலுக்கு செல்வோர் விமான நிலையத்தில் பதிவினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு சமூகமளித்து பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளில் தொழிலுக்கு செல்வோருக்கான பதிவு அடுத்த வருடம் முதல் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனிய கூறியுள்ளார்.
செய்தி : திருகோணமலை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்