ஜனாதிபதி – யசூசி அகாசி இடையே சந்திப்பு

ஜனாதிபதி – யசூசி அகாசி இடையே சந்திப்பு

ஜனாதிபதி – யசூசி அகாசி இடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 7:35 pm

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சமாதானம் மற்றும் புனர்வாழ்விற்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு தெரிவித்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள், நல்லிணக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்களில் ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வளங்கள் கிடைக்கின்ற போதிலும், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக யசூசி அகாசி தெரிவித்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்