சூதாட்ட நிலைய கட்டடத்தின் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

சூதாட்ட நிலைய கட்டடத்தின் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

சூதாட்ட நிலைய கட்டடத்தின் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 7:38 pm

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் சூதாட்ட நிலையம் நடத்திச்செல்லப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அந்தக் கட்டடத்தினை சூதாட்டநிலையம் நடத்திச்செல்வதற்கு வழங்கியமை தொடர்பில் அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய,  அந்த கட்டடத்தின் உரிமையாளரை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்