இரண்டாவது டெஸ்ட் அவுஸ்ரேலியா வசம்

இரண்டாவது டெஸ்ட் அவுஸ்ரேலியா வசம்

இரண்டாவது டெஸ்ட் அவுஸ்ரேலியா வசம்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 12:22 pm

குளிர்கால ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 218 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

எடிலைட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 9 விககெட்டுகளை இழந்து 570 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172  ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை நிறுத்துக் கொண்டது.

531 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்